Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, November 30, 2011

கதை அம்சமா கட்சை கட்ட ரெடி ஜெனிலியா!!

ஜெனிலியா இரண்டு இந்திப் படங்களில் பிசியாக நடிக்கிறார். ஒரு தெலுங்கு படமும் கைவசம் உள்ளது. தமிழில் அவர் நடித்த `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசானது. வேறு தமிழில் படங்கள் இல்லை.

தமிழை விட்டு ஒதுங்கி முழுக்க இந்திப் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்று ஜெனிலியாவிடம் கேட்டபோது மறுத்தார். ஜெனிலியா கூறியதாவது

எனக்கு மொழிபேதம் கிடையாது. தமிழ், இந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் தொடர்ந்து நடிப்பேன். தமிழில் `வேலாயுதம்' படத்தில் நடித்து உள்ளேன். உருமியிலும் நடித்து இருக்கிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் சம்பளத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்பேன்.

செய்யும் தொழிலை முழு ஈடுபாட்டுடன் பயபக்தியோடு செய்தால் வெற்றி பெறலாம். கடுமையாக உழைத்தால் பணம், புகழ் எல்லாம் தானாக வரும். ரிதேஷ்தேஷ்முக்குடன் எப்போது திருமணம் என்று எல்லோரும் கேட்கின்றனர். என் சொந்த விஷயங்களை பேச விரும்பவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.

மனித குலத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் விடப்பட்ட சவால்!?

மனித குலத்தின் இறையாண்மைக்கும், விஞ்ஞான அறிவுக்கும் விடப்பட்ட சவால், "எய்ட்ஸ்'. உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரணத்தை சிறிது காலம் தள்ளிப்போட மட்டுமே மாத்திரைகள் உள்ளன.

இந்த நோய் பாதிப்பால், மனிதநேயமும், குடும்ப உறவுகளும் குப்பைக்கு சென்று கொண்டிப்பது வேதனைக்குரிய ஒன்று. எய்ட்ஸ் பாதித்தோரை, ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பதும், குடும்பத்தில் இருந்து வெளியேற்றுவதும் வாடிக்கையாக அரங்கேறுகிறது. அத்தகைய புறக்கணிப்பு, மனிதநேய மாண்பு சிதையுற்றும், சீரழிந்தும் இருப்பதையே நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய சூழலில், எய்ட்ஸ் பாதித்தோருக்கு அன்பும், ஆதரவும் கொடுத்து பாதுகாக்க வேண்டியது அவசியம். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு, நாட்டின் அனைத்து பகுதியிலும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. விழிப்புணர்வு மூலம் நோய் பாதித்தோரை அரவணைக்கும் சூழ்நிலையை உருவாக்க முடியும்.உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துதான் எய்ட்ஸ் நோய் என்பதை நினைவூட்டும் நாள் இன்று (டிச., 1).

இந்தியாவில், ஹெச்.ஐ.வி., எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மிசோராம், நாகாலந்து உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி தொழிலுக்கு மையமாக இருக்கும் நாமக்கல் மாவட்டம், கடந்த 2005ல் தமிழகத்திலேயே ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. பல்வேறு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தால், நாமக்கல் மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி., பாதிப்பு குறைந்து, முதலிடத்தில் இருந்து மூன்றாமிடத்துக்கு வந்துள்ளது.தமிழகத்தில், தேனி, கரூர் மாவட்டங்கள் ஹெச்.ஐ.வி., பாதிப்பில் முன்னணியில் உள்ளன. நாமக்கல் மாவட்டம் போன்று அம்மாவட்டங்களிலும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியம்.

Tuesday, November 29, 2011

அவசரத்தில் அள்ளி திணிப்பவரா நீங்கள்

சிலர் சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் ஆமை வேகத்தில் மெல்ல சாப்பிடுவார்கள். ஆனால் மெல்ல சாப்பிடுவதுதான் உடல் நலத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது சம்மந்தமாக நியூசிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

40 வயதிலிருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை தேர்வு செய்து சிலரை வேகமாக சாப்பிட வைத்தனர். சிலரை மெல்ல சாப்பிட வைத்தனர். அவர்களை பின்னர் ஆய்வு செய்தனர். இதில் வேகமாக சாப்பிடுபவர்கள் உடல் எடை குண்டாகி இருந்தது.

மெல்ல சாப்பிடுபவர்கள் சாதாரண உடல் எடையுடன் இருந்தனர். எனவே வேகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிரிக்கும் என்று ஆய் வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையாளிகளுக்கு இருக்கும் அச்சம் பயம் தமிழனுக்கு இல்லையா?

முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது.

படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம்.

முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது.

இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.

அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம்.,இதற்கு தமிழக அரசின் நிலைபாடுதான் என்ன?

Monday, November 28, 2011

நோக்கியாவுக்கு சோதனை வேலை ஆட்களுக்கு வேதனை!!

பெர்லின், நவ.29 : செல்போன் தயாரிப்பில் உலகில் முன்னணி நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளின் சீமன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செல்போனை தயாரித்து வருகிறது. கடும் போட்டி காரணமாக சமீப காலமாக இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எரிக்சன் மற்றும் சீன நிறுவனம் ஹாவி ஆகியவை கடும் போட்டியாக உள்ளன. அவற்றை சமாளிக்க முடியாமல் நோக்கியா நிறுவனம் தவிக்கிறது. எனவே நஷ்டத்தை சரிக்கட்ட 17 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று நோக்கியா நிறுவனம் முடிவு செய்தது.

இந்த நிறுவனத்தில் மட்டும் 74 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 23 சதவீத ஊழியர்கள் நீக்கப்படுகின்றனர். இதன் மூலம் நிறுவனத்துக்கு ரூ. 7,300கோடி மிச்சமாகும். எனவே நிறுவனத்தை லாபத்தில் செயல்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நோக்கியா சீமன்ஸ் நிறுவனம் ஆகியவை தனித்தனியே பிரிந்து விடுவது என்றும் திட்டமிட்டுள்ளனர்.

காதல் கல்யாணம்வரை சென்ற நடிகைக்கு கொக்கிபோடும் நடிகர்

திருமணத்திற்கு பின்னர் நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறார் நயன்தாரா. இந்தநேரம் பார்த்து அவரது மனசை கலைக்கும் வகையில், மீண்டும் நடிப்பதற்கு நிறைய ஆஃபர்கள் வந்து கொண்டு இருக்கிறதாம்.

நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, சீதை வே‌டத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இந்தபடம் ஹிட்டாக நயன்தாராவின் நடிப்பும் ஒரு முக்கிய காரணமாம். படத்தில் சீதையாகவே வாழ்ந்திருந்தார் நயன்தாரா.

நயன்தாராவின் நடிப்பை பார்த்து, தன்னுடைய படத்திலும் அவரைத்தான் நடிக்க வேண்டும் என்று கூறி வருகிறார் பிரபல நடிகர் நாகர்ஜூனா. இவருக்கும் பல சரித்திர படங்கள் சில்வர் ஜூப்ளி கொண்டாடி இருக்கிறது. இப்போது பாலகிருஷ்ணாவின் படம் ஹிட் என்றதும், தானும் அதுபோலவே ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அதுவும் தனக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். ராம்கோபால் வர்மா, அடுத்து ராவணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதில்தான் சீதையாக நடிக்க வைக்க நயன்தாராவை தேடிக் கொண்டிருக்கிறார் நா.ஜூனா.

நயன்தாரா, நடிப்பேன் என்றும், நடிக்கமாட்டேன் என்றும் உறுதியாக சொல்லவில்லை. இதனால் மீண்டும் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படிதான் நயன்தாராவுக்கு இப்போது கொக்கிபோட்டுகொண்டு இருக்கிறார் நடிகர் நா.ஜூனா.

Sunday, November 27, 2011

மக்களை பிளவு படுத்தும் அ( இ) ந்நிய சக்தி ? சுரேஷ் கொய்ர்னார்!?

புதுடெல்லி:சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் நடத்திவரும் சமூக நீதி மாநாட்டில் ’நீதிக்கான மக்களின் உரிமை’ என்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது: ‘அரசின் அனைத்து துறைகளும் முஸ்லிம்களுக்கு அநீதியை காட்டுகின்றன. கல்வி கற்ற மாணவர்களுக்கு தங்களுடைய கல்வி தகுதியே பெரும் தலைவலியாக மாறும் அளவிற்கு இந்தியாவின் புலனாய்வு ஏஜன்சிகள்
நடந்துகொள்கின்றன.

அஸிமானந்தா என்ற குற்றவாளி பல வருடங்களுக்கு பிறகு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அதனை கொண்டாட இங்கே ஆட்கள் உள்ளனர். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த உண்மைகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டனர். இந்தியாவில் நடந்த எந்த குண்டுவெடிப்பிலும் ஒரு முஸ்லிமுக்கும் பங்கில்லை.’ இவ்வாறு கெய்ர்னார் கூறினார்.

உண்மையான கொடூர குற்றவாளிகளை (ஹிந்துதுவ தீவிரவாதி) வெளியில் உலாவ விட்டுவிட்டு அப்பாவிகளை உள்ளே வைப்பதும் காக்கிகளின் கைவந்த கலை, ஆதலால்தான் சொல்கிறோம் காக்கிகளும் காவிகளும் ஒன்றுதான். வித்தியாசம் நிறத்தில் மட்டுமே.

இதற்கு துணை போவது இந்திய காவல்துறையும் உள்துறையும் ஏனென்றால் இதையெல்லாம் கண்டு காணாமல் இருக்கிறார்கள் மத்தியில் ஆள்பவர்கள். (இல்லாத ஒன்றை உருவாக்குவதும் இருப்பதை இல்லாமல் ஆக்குவதும் இந்திய காவல்துறையும், பார்ப்பன ஊடகங்களும்.)

கொலைவெறியை ஊக்குவிப்பவர்களுக்கு !!

சென்னை: 3 என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். அனிருத் என்ற இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.

திரையுலக பிரபலங்கள் கொலவெறி டி பாடலைக் கேட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் கொலவெறி டி பாடலைத் தொடர்ந்து கொலவெறி டா பாடலையும் சேர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது 3 படக்குழு.

கொலவெறி டா பாடல் குறித்து இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கூறுகையில், காதல் தோல்வியில் பாடுகிற பாடல்கள் பெண்களை மையமாக வைத்தே பாடப்படுகின்றன. காதல் தோல்விக்கு ஆண்களை யாரும் ஏன் குறை சொல்வது இல்லை என்று என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள்., அவர்களின் விருப்பத்திற்கிணங்க கொலவெறி டா பாடலை எழுதலாமா என்று யோசித்து வருகிறேன் என்று குறிப்பிட்டார்.

இதுபோன்ற பாடலை நாம் ஊக்குவிக்காமல் புறக்கணித்தால்தான் தொடராமல் நிற்கும்., அது உங்கள் கையில்தான்.

Saturday, November 26, 2011

பார்த்த ஞாபகம் இல்லையோ பாவனா (Bio-Data)

மலையாளத்தில் பல படங்களில் நடித்த நடிகை பாவனா, தமிழில் சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானர்.

தனது வசிகர முகத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த பாவனா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய சினிமா முழுக்க ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். இவர் தனக்கு பிடித்தது, பிடிக்காதது, மறக்கமுடியாதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ...

நிஜ பெயர் : கார்த்திகா., சினிமா பெயர் : பாவனா., பிறந்தது : கேரளா - திரிச்சூர்.

அம்மணிக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து தன பெயரை உலவவிட்டுகொண்டுள்ளார்.

உணவுக்கு மட்டுமல்ல மருந்தாகவும் பயன்படும் வெங்காயம்

தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.

காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.

அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.

விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.

தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும்.

வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.

வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்.

Friday, November 25, 2011

தமிழக முதல்வர் கன்னத்தில் (பளார்) விட ஆசையா?

டில்லியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்தார் சீக்கிய வாலிபர்.

"ஊழல் அரசியல்வாதிகளுக்கு இனி இது தான் கதி' அடித்த இளைஞர் வாதிட்டார்.

இதை சரி என்று வாதிடுபவர்களா உங்களுக்கு இதுபோல் கோபம், ஆத்திரம் தில்லு இருக்குமானால் நம் தமிழக முதல்வர் (மக்கள்மேல் அக்கறை இல்லாத) செல்வி ஜெயலலிதா கன்னத்தில் அறைய முடியுமா? அறைந்தாலும் தப்பில்லை (விலைவாசியை காரணம் காட்டி). பதவியில் இருந்து ஆட்டம் போடுபர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.

வேலாயுத சறுக்கலை சரிசெய்வாரா விஜய்?

வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. விட்டதை சரி செய்து முதல் இடத்தை பிடிப்பாரா விஜய்., வசூலில் 7ம் அறிவு முதலில் உள்ளாது என்பது குறுப்பிட தக்கது.

Thursday, November 24, 2011

அதிக ஆசையில் அரவான் நாயகி

அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் டி.சிவா தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கி வரும் அரவான் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இதன் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இதன் நாயகி தன்ஷிகா அரவான் படம் குறித்து பேசுகையில், இந்த படத்தில் நான் நடித்தது, நடிப்பு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு வந்த அனுபவத்தையே எனக்கு கொடுத்திருக்கிறது. இயக்குநர் வசநத்பாலனின் கடின உழைப்பு எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது.

அரவான் எனக்கு தேசிய விருதை பெற்றுத் தரும் படம் என்றால் அது மிகையே அல்ல என்று கூறும் தன்ஷிகா அரவானில் இடம் பெறும் நிலா நிலா போகுதே பாடலையே எப்போதும் முணுமுணுத்து வருகிறார். தேசிய விருது கிட்டுமா தன்ஷிகாவுக்கு.

Wednesday, November 23, 2011

ரத்தன் டாடா வுக்கு இனி டாட்டா

புது தில்லி, நவ.24: புகழ் பெற்ற டாடா குழுமத்தின் தலைவராக 20 ஆண்டுகளாக இருந்த ரத்தன் டாடா, அந்தப் பதவியிலிருந்து விடைபெறுகிறார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக சைரஸ் மிஸ்டிரி பதவியேற்கவுள்ளார்.

2012-ம் ஆண்டு டிசம்பரில் மிஸ்டிரி பதவியேற்பார் எனத் தெரிகிறது. அதுவரை ஒர் ஆண்டுக்கு ரத்தன் டாடாவுடன் இணைந்து அவர் பணி செய்வார்.

74 வயதுடைய ரத்தன் டாடா ஹார்வர்டு வர்த்தகப் பள்ளியில் மேலாண்மை பயின்றவர். 1962-ம் ஆண்டு டாடா குழுமத்தில் சேர்ந்த ரத்தன் டாடா, 1981-ம் ஆண்டு டாடா இண்டஸ்டிரீஸ் தலைவராகவும், 1991-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

பியட் ஸ்பா, அல்கோ, போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களின் வாரியத்திலும் அவர் உறுப்பினராக உள்ளார். மிட்சுபிஷி, ரோல்ஸ் ராய்ஸ், போன்ற நிறுவனங்களின் ஆலோசனை குழுவிலும் அவர் உறுப்பினராக உள்ளார்., மேலும் அவர் இந்திய அரசின் பத்ம விபூஷண் விருதையும் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட டேம் 999

பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து, அணை உடைவதுபோன்று தயாரிக்கப்பட்ட படமான டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட மாட்டோம் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் தீயிட்டு எரிக்கப்பட்ட பட ரீல்கள்.

Tuesday, November 22, 2011

விழி நுனியில் விண்ணை தொடலாம் வாங்க!!

இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் புத்தகங்களின் இடத்தை இன்டர்நெட் பிடித்துவிட்டது. எந்தத் தகவல் வேண்டுமானாலும் கணினியை இயக்கி இணையதளங்களில் திரட்டிவிடலாம். சிலர் லேப்-டாப்பை எப்போதும் சுமந்துசெல்வதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த சுமையையும் குறைக்க, உங்கள் கண்களில் "கான்டாக்ட் லென்ஸ்' பொருத்தி, அதன் மூலம் இன்டர்நெட் இணைப்பை வழங்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்., இதற்காக பார்வை குறைபாடு உடையவர்கள், கண் கண்ணாடியை பயன்படுத்துவதற்குப் பதிலாக அணியும் கான்டாக்ட் லென்சில் பல மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.

விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கான்டாக்ட் லென்ஸுடன் இணைக்கப்படும் ஆன்டெனா, வெளியிலிருந்து வரும் தகவல்களைத் திரட்டித் தருகிறது. "சிப்'பில் பதிவாகும் அந்தத் தகவல்கள், மெல்லிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த வசதியின் மூலம், இ-மெயில் உள்ளிட்ட பல தகவல்களைப் படிக்கலாம்.

இந்த கான்டாக்ட் லென்ûஸ ஒருவருக்குப் பொருத்தி, வெற்றிகரமாக இயக்கிக் காட்டியுள்ள விஞ்ஞானிகள், இதனால் கண்ணுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். , எனினும், கண்களுக்கு மிக அருகில் இருப்பதால், வாசகங்களைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. இப்பிரச்னையை சரிசெய்ய தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது புத்தக மூட்டையை சுமந்து செல்லும் மாணவர்கள், இன்னும் சில ஆண்டுகளில் லேப்-டாப்புடன் (மடிக் கணினி) பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்படலாம். விஞ்ஞானிகளின் தற்போதைய கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்துவிட்டால், கை வீசிக் கொண்டும் செல்லலாம்.

இதைச் சாதித்திருப்பது, (வழக்கம்போல) அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்தான்.

கொலை வெறி கும்பலுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய காவல்துறை!?

ஹைதராபாத்:ஹைதராபாத் நகரில் கடந்த பக்ரித் பண்டிகை முதல் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்வா தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் ராஜா சிங் என்ற ஹிந்துத்வா வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜா சிங் விசாரணைக்கு பின்னர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். அவரிடம் இருந்து காவல்துறை பல முக்கிய தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது., மேலும் விசாரணையில் ஹிந்துத்வா வாதிகள் ஆந்திர காவல்துறையில் சேருவதற்கு தாம் பயிற்சி அளித்ததை ராஜா சிங் உறுதி செய்துள்ளார்.

மேலும் சங்கப் பரிவார இளைஞர்களை காவல்துறையில் சேர்ப்பதற்கு பயிற்சி அளித்ததில் தனக்கு பணி ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர் ஒருவர் உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புலனாய்வு சிறப்பு பிரிவு ராஜா சிங்குடன் தொடர்புடைய அந்த ஆதிகாரி யார் என்பதை கண்டறிந்துள்ளனர். அவர் கடந்த 30 வருடங்களாக ஆந்திர காவல்துறையில் பல உயர் பதிவிகளில் இருந்தவர் என்றும் அவரின் காவிப்பற்று அனைவரும் அறிந்த ஒன்று என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் ராஜா சிங்; ‘ஹிந்துத்வா தீவிரவாதிகள் விரைவில் தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்க உள்ளதாகவும் அதற்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பதை தாம் தெரிவிக்க முடியாது’ என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, November 21, 2011

சின்ன அசினின் புலம்பல்

தமிழில் விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. சின்ன அசின் என்று நடிகர் விஜய்யால் புகழப்பட்டவர் பூர்ணா, தொடர்ந்து துரோகி, கந்தக்கோட்டை, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன் என்று நடித்துள்ளார்.

சமீபத்தில் பூர்ணா கொச்சியில் ரூபாய் 2 கோடி மதிப்பில் ஒரு வீடு கட்டியுள்ளார் என்று செய்திகள் வந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நான் 4 வயசுல இருந்தே பரதம், குச்சிபுடி உள்ளிட்ட நடனங்களை கற்று வருகிறேன். மாதத்துக்கு இரண்டு முறை டான்ஸ் ஷோ பண்ணுவேன். என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம், நிறைய ஷாப்பிங் செய்வது. இப்பவும் கூட என் வீட்டில் பார்த்தா, பில் கூட கிழிக்காத நிறைய டிரஸ் இருக்கும்.

எப்பவும் எதாச்சும் வாங்கிட்டே இருப்பேன். இப்படி செலவு செய்யாத என்று அம்மா கூட பலமுறை சொல்லி பார்த்தாங்க. ஆனா நான் கேட்கல. கடைசியா, கொச்சியில ஒரு பிளாட் விலைக்கு வருவதை அறிந்த என்னுடைய அம்மா, அதை வாங்க முடிவு பண்ணுனாங்க. நானும் என்னிடம் உள்ள ரொக்க பணம் எல்லாத்தையும் போட்டு, பற்றாக்குறைக்கு வங்கியில் கடன் வாங்கி, ரூ.80லட்சத்தில் அந்த பிளாட்டை வாங்கினோம். இதுதான் நிஜம். ஆனா, அதுக்குள்ள 2 கோடிக்கு பிளாட் வாங்கியிருக்கேன் என்று செய்தி வந்திருச்சு. அதில் உண்மையில்லை.

அதிகம் அழகு படுத்திக்கொள்வது ஆண்களா! பெண்களா!?

லண்டன் : பொதுவாக வெளியில் கிளம்புவதென்றாலே, "இன்னுமா அலங்காரம் முடியவில்லை. சீக்கிரம் தயாராகக் கூடாதா?' என்று அன்பாகவும், மிரட்டியும் ஆண்கள்தான் தங்கள் மனைவிகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள். லண்டனில் இப்போதெல்லாம், இந்தக் கேள்வியை ஆண்களைப் பார்த்து பெண்கள் கேட்கின்றனராம்!

லண்டனில் உள்ள "டிராவலாஜ்' என்ற நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

ஆய்வில் தெரியவந்துள்ளதாவது : உடலைச் சுத்தப்படுத்த, முகச்சவரம், சிகையலங்காரம், முகத்தில் கிரீம்களைத் தடவ, தகுந்த ஆடைகளை தேர்ந்தெடுக்க ஒரு நாளைக்கு 81 நிமிஷங்களை ஆண்கள் செலவிடுகின்றனராம். அதுவே பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கும், ஆடைகளை அணிவதற்கும் 75 நிமிஷங்கள்தான் எடுத்துக் கொள்கின்றனராம்.

குளிப்பதற்கு ஆண்கள் 23 நிமிஷங்களும், பெண்கள் 22 நிமிஷங்களும் (ஒரு நிமிஷத்தில் ஆண்களை முந்திவிட்டீர்களே) செலவிடுகின்றனராம். ஆடைகளைத் தேர்ந்தெடுக்க ஆண்களுக்கு 13 நிமிஷங்களும், பெண்களுக்கு 10 நிமிஷங்களும் ஆகின்றதாம்.

இதே நிறுவனம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், பயணத்தின்போது ஆண்கள் கொண்டு செல்லும் "டாய்லெட் பேக்'கில் சராசரியாக 156 பவுண்ட் மதிப்புள்ள டூத் பிரஷ், பேஸ்ட், சீப்பு, முகச்சவரத்துக்கான ரேஸர், பல்வேறு வகையான கிரீம்கள், லோஷன்கள் உள்ளிட்ட பொருள்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மக்களிடம் பிடுங்கி மக்களுக்கே !?

அத்தியாவசிய பொருட்களான, பஸ் கட்டண உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்த முடிவு உள்ளிட்ட அறிவிப்புகளை, கடந்த 17ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

கட்டண உயர்வுக்கு தி.மு.க., - காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., அணியில் போட்டியிட்ட தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உதிரி கட்சிகளும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் மதுரையில் ஒரு திருமண விழாவில் பங்கேற்று பேசிய எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் , தமிழகத்தில் விலை உயர்வை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சி போய் கும்பல் ஆட்சி நடக்கிறது என்றார்.

தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்கை காப்பாறாமல் சொன்னது ஒன்று இப்போது செய்வது வேறு இரட்டை வேடமிடுகிறார் ஜெயலலிதா., விலைவாசியில் கிடைக்கும் பணத்தை கொண்டு மக்களுக்கு இனாம் தரத்தான் இந்த விலைவாசி உயர்வு நாடகம் என்றார் விஜயகாந்த்.

எது எப்படியோ நாமும் இதையெல்லாம் மறந்து அடுத்த தேர்தலில் நூறு, இருநூறுக்கு நம் ஓட்டை விற்றுவிட்டு இவரையே தேர்ந்தேடுப்போம்., இவரை (ஜெயா) புறக்கணியுங்கள் அல்லது இலவசத்தை புறக்கணியுங்கள். இதற்கும் ஒரு "ஜே' "ஜே' போடுங்க.

Sunday, November 20, 2011

ஆட்டம் போட்ட நித்ய சாமியின் கொட்டம் அடங்குமா?

கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை நித்யானந்தா அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது.

அப்போது நடிகை ரஞ்சிதாவும் உடன் இருந்ததாக கூறப்பட்டது. இதற்கு அர்ஜூன் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நித்யானந்தாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

இதைதொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அர்ஜூன் சம்பத் கடந்த 8.8.2011 அன்று நித்யானந்தாவுக்கும், நடிகை ரஞ்சிதாவுக்கும் வக்கீல் நோட்டீசு அனுப்பினார். ஆனால் அந்த நோட்டீசுக்கு அவர்கள் 2 பேரும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதனால் நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா மீது அர்ஜூன் சம்பத் கோவை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் தனக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு சத்தியமூர்த்தி 23-ந் தேதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்று கூறி தள்ளிவைத்தார்.

ரத்த கண்ணீர் வடிக்கும் ஆண்கள்

சென்னையில் உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆண்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.

இதில் சென்னையை சேர்ந்த சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பலரும் வரதட்சணை கேட்டு மிரட்டிய வழக்கு, குடும்ப வன்முறை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சிதைந்து கொண்டிருப்பவர்கள், வாழவும் முடியாமல் வேலைக்கும் போகவும் முடியாமல் தினமும் அவதிப்படுவதாக குமுறினார்கள்.

ஆண்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் அருந்துமிலன் கூறும்போது, பெண்கள் ஜோடித்த பொய்யான வழக்குகளில் சிக்கி பல ஆண்கள் பாதித்துள்ளனர். குடும்ப வன்முறை சட்டங்கள் ஆண்களுக்கு எதிராகவும், அடிமைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

பெண்களின் பொய்யான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சட்டரீதியாக உதவுவதற்கு தனி அறக்கட்டளை தொடங்கப்படும் என்றார்., பெண்களை பார்த்து இறக்கப்படும் ஆண்கள், ஆண்களை பார்த்து இறக்கம் வருமா?

Saturday, November 19, 2011

திரையுகலகில் நுழைந்தது எப்படி பால் நடிகை

நான் பிளஸ் 2 முடித்ததும் மாடலிங்குக்கு வந்தேன். அதன் பிறகு சினிமா வாய்ப்பு வந்தது. நான் நடிகையாவதை பெற்றோர் விரும்பவில்லை. எதிர்த்தார்கள். எனது அண்ணன் அவர்களை சமரசப்படுத்தினான்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி சினிமாவுக்கு வந்தேன். அவர்கள் என்னை என்ஜினீயருக்கு படிக்க வைக்கத்தான் ஆசைப்பட்டார்கள். மைனா படம் திருப்பு முனையாக அமைந்தது. பிறகு விக்ரமுடன் நடித்தேன்.

நான் விக்ரமின் தீவிர ரசிகை. அவருடன் நடித்தது அதிர்ஷ்டம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கல்லூரிக்கு போகிறேன். தோழிகள் படிப்பில் உதவுகின்றனர். சிந்து சமவெளி படத்தில் எனது வயதுக்கு மீறிய வேடம் அமைந்தது.

வலுவான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் நாகார்ஜுனா படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது. முதல் தட வையாக பெரிய நடிகரான அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்த போது மயக்கமே வந்து விட்டது. ஸ்ரீதேவி எனக்கு பிடித்தமான நடிகை இப்போதும் அவருக்கு மரியாதை இருக்கிறது என்றார்.

மப்புக்கு ஆப்பு!! வருகிறது புது சட்டம்!?

புதுடில்லி: போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமம் ரத்து அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை ஆகிய கடுமையான தண்டனைகள் உண்டு.

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் காரணமாக, விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகின்றன. விபத்தில், நான்கு நிமிடங்களுக்கு ஒரு உயிர் பலியாகிறது. கடந்தாண்டில் மட்டும், விபத்துகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை கடுமையாக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். பதிவெண் இல்லாத வாகனத்தை ஓட்டுபவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு, சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சக ஒப்புதல் கிடைத்த பின், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும்.

Friday, November 18, 2011

ஜில்லென்று வரப்போகும் ந (ம்) மீதா!

நடிகை நமீதாவை பார்த்து பலகாலமாகி விட்டதே என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நற்செய்தியாக, நமீதா நடிக்கும் புதிய படம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஐதராபாத்தில் போட்டனர்., இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் வருகிறாராம் நமீதா. இதன் மூலம் கிராமத்து சேலைக்கட்டில் ஜில்லென்று தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி நமீதா அளித்துள்ள பேட்டியில், எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது. இதுவரை கவர்ச்சி பாத்திரங்கள், போலீஸ் என்று நான் செய்துள்ளேன். ஆனால் இந்தப்படத்தில்தான் கிராமத்து பெண் வேடத்தில் வரப் போகிறேன். என்னைச் சுற்றி நடப்பது போல கதையை வைத்துள்ளனர். பெண்களுக்கான படம் இது. ஆக்ஷனும் படத்தில் உண்டு. எனது திறமையை முழுமையாக வெளிக் கொணரும் வகையிலான கதை இது என்பதால் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

அறிக்கை விட்டு ஆட்டம் போட்ட ஜெயா வாய் மூடியது ஏன்? கலைஞர்!?

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார பற்றாக்குறை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாட்டில் 6 மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 970 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. சென்னை தவிர மற்ற நகரங்களில் தினமும் 4 மணி நேரம், கிராமங்களில் 5 மணி நேரம் மின்வெட்டு மின்வெட்டு அமலில் உள்ளது. திமுக ஆட்சியில் மின்சாரம் இல்லை என்று அறிக்கை விட்ட ஜெயலலிதா, இப்போது வாயை மூடிக்கொண்டுவிட்டார்.

விலை உயர்ந்த மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளை சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் திறக்கப்போவதாக அறிவித்திருப்பது தான், அதிமுக அரசின் புதிய சாதனை.

சென்னையில் முத்தமிழ்ப் பேரவைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணைப்பிறப்பித்திருப்பதற்கும் திமுக தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் அமரும் முன்பு தான் சினிமாவில் ஆடுவதுபோல் ஆட்டம் போட்டார்., ஆனால் இப்போது எல்லா சுமைகளையும் மக்கள்தான் சுமக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்.. மக்கள் தலை மேல் இடி மேல் இடி.

மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

Thursday, November 17, 2011

சர்வதேச ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவருக்கு துபாயில் விருது

துபாய் : பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு இசையமைத்ததற்காக, ஆஸ்கார் விருது பெற்றார்.

சர்வதேச அளவில், ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ள அவரது திறமையைப் பாராட்டி, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளதாக, துபாய் சர்வதேச திரைப்பட விழாவின் தலைவர் அப்துல் ஹமீது ஜுமா தெரிவித்துள்ளார்.

துபாயில், டிச., 7 முதல் 14ம்தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே, இந்த விருதை, அமிதாப், சுபாஷ் கய், ஷாருக்கான் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மேடையில் தமிழில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று எல்லாருடைய கண்களையும் அகல விரிய வைத்தவர் இந்த A R R என்பது குறுப்பிட தக்கது.

புலம் பெயர்ந்த இலங்கை (ஈழ) தமிழர்களுக்கு இடம் கிடைக்குமா ?

கொழும்பு: இலங்கைத் தமிழர்களை குடியமர்த்துவதற்காக, அந்நாட்டு அரசு, 1,336 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இலங்கையில், அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் போது, திரிகோணமலை, முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான மக்கள் வெளியேறி, அகதிகள் முகாமில் தங்கினர். புலிகளுடனான சண்டை முடிந்து விட்டதால், குடிபெயர்ந்த தமிழர்களை, மீண்டும் அவரவர் இடங்களில் குடியமர்த்தும்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகள், இலங்கை அரசை வற்புறுத்தி வருகின்றன. கடந்த 2009ம் ஆண்டு நடந்த சண்டையின் போது, 3 லட்சம் தமிழர்கள் அகதிகள் முகாமில் தங்கினர். படிப்படியாக, இவர்களை குடியமர்த்தும் பணி நடக்கிறது.

இது குறித்து, இலங்கை தகவல் தொடர்பு அமைச்சர் ராம்புக்வெலா குறிப்பிடுகையில், "இன்னும் 10 ஆயிரம் பேரை குடியமர்த்த வேண்டியுள்ளது. முல்லைத் தீவில் 1,672 குடும்பங்களும், திரிகோணமலையில் 1,272 குடும்பங்களும், மன்னார் பகுதியில் 116 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்கு, 1,336 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை கொண்டு, தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும்' என்றார். "தமிழர்களுக்கு அதிகாரப் பங்களிப்பு குறித்து, அமைப்பு ரீதியான பேச்சு வார்த்தை, அடுத்த மாதம் மூன்று நாட்கள் நடக்கும்' என, இலங்கை அரசின் பிரதிநிதியும் எம்.பி.யுமான, ராஜிவா விஜேசிங்கா தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஆட்குறைப்பால் அதிர்ச்சிக்குள்ளான இந்தியர்கள்!

லண்டன் : இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேராத நாடுகளிலிருந்து பணிதொடர்பாக, இங்கிலாந்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 40 ஆயிரம் பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இங்கிலாந்து அரசின் குடியேற்றத்துறை ஆலோசனை குழு, பணியாளர் குறைப்பை எந்தெந்த துறைகளில் எல்லாம் மேற்கொள்ளலாம் என்பதன் விபரத்தை, பிரதமர் டேவிட் கேமரூன் பார்வைக்கு வைத்தது. இந்த பரிந்துரைக்கு, பிரதமர் கேமரூனும் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, இந்த பணியாளர் குறைப்பு பட்டியலில், மருந்தாளுனர்கள் (பார்மசிஸ்ட்கள்), கால்நடை மருத்துவர்கள், பேச்சு மற்றும் லாங்குவேஜ் தெரபிஸ்ட்கள், மேல்நிலைக் கல்வி உயிரியல் ஆசிரியர்கள், ஆர்‌தோப்டிஸ்ட்கள், இசை வல்லுனர்கள் உள்ளிட்ட துறைகள் இடம்பெற்றுள்ளன.

இன்சூரன்ஸ் மற்றும் நிதி சம்பந்தமான நுணுக்கம் பெற்றவர்கள் மற்றும் பைப் வெல்டர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் என பல பிரிவுகளில் சிறந்து விளங்கும் நம்நாட்டவர்களுக்கு இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளது.

Wednesday, November 16, 2011

காதல் படத்தில் நடிக்க மறுத்த நடிகைகள்

அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு காதலிக்க நேரமில்லை என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு தலைப்பை முடிவு செய்த பின்னர் சில சிக்கல்கள் எழுந்துள்ளன.

அதாகப்பட்டது, இனிமேல் பழைய பட தலைப்புகளை யார் வைத்தாலும், சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது அவர்களின் வாரிசுகளிடமிருந்தோ நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கி வர வேண்டும். இல்லையென்றால் அந்த தலைப்புக்கு அனுமதி இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருப்பதால் சிக்கலில் மாட்டியிருக்கிறார்கள் ஜீவாவும், அகமதுவும்.

காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கிய ஸ்ரீதர் தற்போது உயிரோடு இல்லை. அவரது உறவினர்களிடம் இந்த சர்டிபிகேட்டை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம். இதுவாவது பரவாயில்லை, படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேரும் நடிகையை தேடியே நெடும்பயணம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தீக்ஷா சேத், தமன்னா, ரிச்சா கங்கோபாத்யா என பலரும் படத்தில் நடிக்க மறுத்துவிட, வேறு வழியில்லாமல் புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

பெங்களூர் : குளோபல் மீடியா அறிக்கையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யாரோ சில விஷமிகள் இந்த வலைதளத்திற்குள் நுழைந்து 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் கணக்குகளில் புகுந்து பாலியல் மற்றும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை இணைத்துள்ளனர். பெங்களூர் நகரத்தில் மட்டும்2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ் புக் பயனீட்டாளர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரில் சைபர் க்ரைம் துறைக்கு இதுக்குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. சில புகார்கள் தொடர்பாக இத்துறை விசாரணையை துவக்கியுள்ளது.

நேற்று காலை பெங்களூர் கோரமங்கலா பகுதியை சார்ந்த காமினி வர்மா என்பவர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது ஃபேஸ் புக் கணக்கை லாக் செய்துள்ளார். அவருக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய ஃபோட்டோவில் உள்ள முகத்தை மார்ஃபிங் முறையில் நிர்வாண நடிகையின் உடலில் ஒட்டிய புகைப்படம் காமினியின் ஸ்டேடஸ் செய்தியில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது தாயார், சகோதரர் மற்றும் 19 நண்பர்கள் காமினியை திட்டி மெஸேஜ் அனுப்பியுள்ளனர். இதனை கண்ணுற்று அதிர்ச்சியடைந்த அவர் நேரடியாக போலீஸுக்கு ஃபோன் செய்துள்ளார். அவர்கள் சைபர் க்ரைமில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். முந்தைய தினம் காமினியின் ஃபேஸ் புக் அக்கவுண்டின் அவரது நண்பரிடமிருந்து செய்தி அறிக்கை வந்துள்ளது. இது ஒரு பிரபல பத்திரிகையில் வெளியான செய்தி என குறிப்பிடப்பட்டிருந்தது. ’party till the wee hours’ என்ற செய்தி தலைப்பை படித்துவிட்டு அவர் அந்த ஆர்வத்துடன் அந்த லிங்கை க்ளிக் செய்துள்ளார். மறுநாள் அவருடைய கணக்கில் எல்லாமே மாற்றப்பட்டுள்ளது.

முன்பு ஓர்குட் என்ற வலைதளமும் இவ்வாறுதான் வீழ்ச்சியை சந்தித்தது. ஃபேஸ்புக்கு அதே போன்ற தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஃபேஸ்புக் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் அதற்கும் ஓர்குட்டின் கதிதான் ஏற்படும் என பிரபல மீடியா நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆகவே தேவையற்ற லிங்குகள் உங்கள் ஃபேஸ்புக்கில் தென்பட்டாலோ அல்லது பாலியல் தொடர்பான ஸ்பேம் செய்திகள் உங்கள் வாலில்(wall) கண்டால் அதனை ஆர்வக் கோளாரில் க்ளிக் செய்துவிடாதீர்கள்.

மற்ற உணவுகளை நிர்ணைப்பது காலை உணவு ஆய்வில்!

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து பிரிட்டனின் சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியுள்ளன.

இந்த ஆய்வு முடிவு பற்றித் தெரிவித்துள்ள குழுவின் அறிக்கையில் மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவதனால் உடலுக்கு நோய் இல்லாமல் பாதுகாக்கின்றது எனக் கூறப்படுகின்றது.

19 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களின் 12 ஆயிரத்து 68 மருத்துவ ஆவணங்களைப் ஆய்வு செய்தே இந்த முடிவுக்கு மருத்துவக் குழு வந்திருக்கிறது.

இந்த மருத்துவக்குழுவின் அறிக்கையின் படி, பெரும் பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

பால் மற்றும் பருப்பு வகைகள் கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றைத் தரும் என்பதால் அவற்றை எடுத்துக் கொள்வதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

Tuesday, November 15, 2011

கனவை படமாக்கப்போகும் இயக்குனர் இமயம்

மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய கனவு படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை கையில் எடுத்துள்ளார்.

படத்தில் ஹீரோவாக முதலில் பார்த்திபன் தான் நடிக்க இருந்தார். ஆனால், ஏனோ சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைரக்டர் அமீர் நடிக்க இருக்கிறார். கூடவே மற்றொரு ஹீரோவாக பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரின் மகன் அச்சன் நடிக்க இருக்கிறார். நாயகிகளாக வாகைசூட வா இனியாவும், கோ கார்த்திகாவும் நடிக்கின்றனர். இதில் இனியா, அமீருக்கு ஜோடியாகவும், கார்த்திகா புதுமுகம் அச்சனுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளனர்.

பொதுவாக பாரதிராஜா அந்தகாலத்திலிருந்தே தன்னுடைய படத்தின் அறிமுக ஹீரோ, ஹீரோயின்களின் பெயரை சினிமாவிற்காக மாற்றுவார். அதுபோல் இந்தபடத்திலும் அறிமுகமாக இருக்கும் புதுமுகம் அச்சனின் பெயரையும் மாற்ற உள்ளாராம். இதனிடையே அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் சூட்டிங் வருகிற 17ம் தேதி அதாவது நாளை மறுநாள் வியாழக்கிழமை, தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. படத்தின் துவக்க விழாவுக்கு இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் உள்ளிட்ட டைரக்டர் பங்கேற்க இருக்கின்றனர்.

அனைவரும் ஒன்று கூடும் ராம்லீலா மைதான மாநாடு

புதுடெல்லி : வருகிற 26,27 தேதிகளில் புதுடெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்காக தேச முழுவதும் நடைபெறும் பிரச்சாரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரிவு மக்களிடையே உற்சாகமளிக்கும் ஆதரவு பெருகிவருவதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சமூக நீதியின் மாநாட்டிற்கான செய்தியை கொண்டு சேர்க்க பிரச்சாரங்கள் உதவியுள்ளன. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.

‘நீதியால் தேசத்தை கட்டமைப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்த கருத்தரங்குகளும் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளன.

சமூக நீதியின் செய்தியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட தெருமுனைக் கூட்டங்கள் பெருமளவிலான மக்களை ஈர்த்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கிளைகள் இல்லாத பகுதிகளில் கூட மக்களிடமிருந்து நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆதரவு பேரணிகளுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் கிடைத்துள்ளது.

இணையதளங்களில் சமூக கூட்டமைப்புகள் வாயிலாக நடத்தப்படும் பிரச்சாரங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக பாப்புலர் ஃப்ரண்டின் ஊடகத்துறை பொறுப்பாளர் அனீஸ் அஹ்மத் தெரிவித்துள்ளார். இன்று முதல் கூடுதல் வலுவான பிரச்சார பணிகள் குறிப்பாக தேசிய தலைநகரில் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்கள், அமைப்புகள், அறிவுஜீவிகள், ஊடகங்கள், போலீஸ், ஆட்சியாளர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பும், ஆதரவும் நம்பிக்கை அளிப்பதாக அனீஷ் அஹ்மத் கூறுகிறார்.

எதிர்பார்த்தை விட அதிக மக்கள் கூட்டம் டெல்லி மாநாட்டில் கலந்துக்கொள்வார்கள் என்பது பிரச்சார வேளைகளில் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவின் மூலம் தெரியவருவதாக பாப்புலர் ஃப்ரண்டின் அறிக்கை கூறுகிறது.

பொழுது போக்கு பிசினசாக மாறியது பவித்ரா !!

பேஷன் நகை டிசைனர் பவித்ரா: வீட்டிலேயே இருந்து நாமளே ஏதாவது தொழில் செய்யணும்னு தான் நான் செய்துக்கிட்டிருந்த வேலையை விட்டேன். எதையும் செய்ய முடியுங்கிற நம்பிக்கை இருந்தது.

ஆனா, என்ன செய்யப்போறோம்னு தெளிவு இல்லை. அப்பதான் ஒரு ஐடியா வந்தது. பர்சனல் பயன்பாட்டுக்காக, "ஆர்டிபிசியல் ஜுவல்லரி' நான் செய்வதுண்டு. சின்ன முதலீட்ல வீட்டிலிருந்தே நகை செஞ்சு விற்க ஆரம்பித்தேன்.கோரல், பேர்ல், ஜேட், ஒனிக்ஸ், எமரால்ட், ரூபி என, இன்னும் நிறைய விதமான கற்களை, அமெரிக்காவிலிருந்து மொத்தமா வரவழைச்சு வெச்சிருக்கேன்.

அங்கேயிருந்து வாங்கி வருகிறவர்கள் அதை அப்படியே மொத்தமா கோர்த்து மாட்டிக்கிறாங்க. ஏன் இதை டிசைனா, பலவித கற்களோட மேட்ச் செஞ்சு அழகான நகை செய்யக் கூடாதுனு தோன்றியது.ஜெய்ப்பூர் தயாரிப்பாளர்கிட்ட நேரடியா தரமான மணிகள் வாங்கி, முதல்கட்டமா தெரிஞ்சவங்களுக்கு டிசைன் செய்து தந்தேன். அப்படியே என் பிசினஸ் வளர ஆரம்பிச்சு, இப்ப நான் நம்பமுடியாத அளவுக்கு என்னை வளர்த்திருக்கு.

பெண்களுக்கு பொதுவா நிறைய டிஸ்பிளே வேணும். நிறைய நகைகளை கண்முன்னே பாத்தாதான் அதுல ஒண்ணு செலக்ட் பண்ணுவாங்க. என்கிட்ட 10, 15 செட் நகைகள் தான் இருக்கும். இந்த பிரச்னையை சமாளிக்கிறதுக்காக, "கேட்லாக்' ரெடி பண்ணினேன். இப்ப என்னோட பிசினஸ் நல்லபடியா போயிக்கிட்டிருக்கு. நிறைய ஆர்டர்களும் கிடைக்குது. நல்ல லாபமும் கிடைக் குது.

Monday, November 14, 2011

டைரக்ட்டர் மறுத்த அஜித் விஜய் படம் ?

தமிழ் சினிமாவில் தமிழ்ப்படம் என்ற நகைச்சுவை படத்தை உருவாக்கி முதல் படத்திலேயே எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் அமுதன்.

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் அமுதன், அஜித் மற்றும் விஜய் அகியோரை இணைத்து படம் எடுக்கப் போவதாக வதந்தி நிலவிக்கொண்டிருந்தது. இந்த செய்தியை அமுதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அவர் தனது அடுத்த படைப்பாக ’இரண்டாவது படம்’ என்ற தலைப்பில் கிட்டத்தட்ட தனது முதல் படத்தின் பாணியில் ஒரு படத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தின் டைட்டிலுக்கு கீழே அவர்” A period, sci-fi action thriller with animation, romance and NO SPOOFS" என்று குறிப்பிட்டிருப்பது மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குனர்களின் புதிய முயற்ச்சிக்கேற்ப நடித்து மாறுபட்ட வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் விமல் இந்த படத்தின் கதாநாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமலுடன் அரவிந்த் ஆகாஷ் மற்றும் ரிச்சர்டு இணைகிறார்கள்., இந்த படம் 2012ல் வெளிவரும்.

அத்வானி ரத யாத்திரையில் முட்டை அபிசேகம் செய்து வரவேற்ற மக்கள்

பட்டிண்டா : ஊழலுக்கு எதிராக பா.ஜ., தலைவர் அத்வானி, நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அவரது (ரத்த) யாத்திரை நடக்கிறது. பட்டிண்டா மாவட்டத்தின் சங்கீரா பகுதியில் அவர் நேற்று ரதத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சிம்ரஞ்சித்சிங் மான் தலைமையிலான சிரோன்மணி அகாலிதள கட்சி ஆதரவாளர்கள் காலிஸ்தானை ஆதரித்தும், அத்வானியை எதிர்த்தும் கோஷம் போட்டனர். முன்னெச்சரிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே பகுதியின் மற்றொரு இடத்தில், முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நஜினா பேகம் என்பவரது தலைமையில் அத்வானியை எதிர்த்து கோஷம் போட்டனர். சாலை வழியாக ரத யாத்திரை சென்றபோது வயல்வெளியில் நின்றிருந்த எதிர்ப்பாளர்கள் சிலர், அவரது ரதத்தின் மீது, முட்டைகளை எறிந்தனர். இன்னும் சிலர் கறுப்பு கொடிகளைக் காட்டினர்.

@ மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். “தன்னலக் குறிக்கோள்’ மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், “வெறியாடும் வாய்ப்பி’லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும் இந்த ரத (ரத்த) யாத்திரை கூட்டம்.

மேயர் தேர்தலில் அசத்தும் அமெரிக்கர் !

அர்டாலி: அமெரிக்காவின் லோவா மாகாணத்திற்கான உள்ளாட்சித்தேர்தல் கடந்த 11-ம் தேதி நடந்தது.

இதில் அர்டாலி என்ற மாநகராட்சி மேயர் பதவிக்கு அங்குள்ள ஹாம்டன் டூமவுன்ட் என்ற பள்ளியில் படித்து வந்த ஜெர்மிமின்னிர்,18 மாணவன் மேயர் வேட்பாளராக போட்டியிட்டான். இதில் 24 ஒட்டுகள் ‌பெற்று மேயராக ‌தேர்வு செய்யப்பட்டார்.

இம்மாணவனை எதிர்த்து போட்டியிட்டவரும் தற்போது மேயராக இருந்தவருமான வெர்ஜில் ஹோமர் வெறும் 8 ஓட்டுக்கள் ‌மட்டுமே பெற்றார். இதனை அம்மாகாணத்தின் ‌கே.ஐ.எம்.டி. என்ற டி.வி.சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மேயராக தேர்வு செய்யப்பட்ட மாணவன் ஜெர்மிமின்னீர் கூறுகையில், எனது தந்தை, நான் பிறப்பதற்கு முன்பு இம்மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர். தற்போது நான் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றார். அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மேயராக பதவி‌ஏற்கவுள்ளார். நான்கு ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் ஜெர்மி மின்னீர்.

Sunday, November 13, 2011

திருமணத்துக்குபிறகு சினியிலிருந்து ஒதுங்கியவர் சின்னத்திரையில்

திருமணத்துக்கு பிறகு கலைத்துறையில் இருந்து விலகி, தனது ரசிகர்களை தவிக்க விட்ட நடிகை மாளவிகா, மீண்டும் நடிக்க வருகிறார்.

ஆனால் சினிமாவில் இல்லை; சின்னத்திரையில்! இந்த அதிரடி முடிவு குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான்கு வயதில் ஒரு மகன், ஒன்றரை வயதில் ஒரு மகள் என எனது இரண்டு குழந்தைகளை கவனிக்க எனக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. சினிமாவில் நடித்தால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் போய் விடும். அதனால்தான் நான் தொலைக்காட்சி மற்றும் விளம்பரப் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

மாளவிகா நடிக்க வருகிறார் என்றால் கலர் கலராக கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கும் திரையுலகிற்கு, சின்னத்திரை சளைத்ததா என்ன? சிலபல சின்னத்திரை இயக்குனர்கள் மாளவிகாவுக்கு கதை சொல்ல தயாராகி வருகிறார்களாம். எந்த தொடரில் நடிப்பது என இன்னமும் முடிவு செய்யாத அம்மணி, விரைவில் சின்னத்திரை தொடரில் பளபளக்கும் புடவை கட்டி நடிப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

உலக அதிசயத்தில் ஒன்றான காடு (forest)

இயற்கையாக உருவான அதிசயங்கள் பற்றிய பட்டியலை சுவிட்சர்லாந்தில் உள்ள `புதிய 7 அதிசயங்கள் அறக்கட்டளை' வெளியிட்டு வருகிறது. அதன்படி, உலக அளவில் 7 அதிசயங்களின் தற்காலிக பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் முதல் இடத்தை ஆப்பிரிக்காவை சேர்ந்த அமேசான் காடு பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை வியட்நாம் ஹலாங் வளைகுடா, மூன்றாவது இடத்தை அர்ஜென்டினா இகுசு நீர்வீழ்ச்சி ஆகியவை பெற்றுள்ளன.

இது தவிர, தென் கொரியாவின் ஜேஜு தீவு, இந்தோனேசியாவின் கொமாடோ, பிலிப்பைன்சின் தரைக்கு கீழ் ஓடும் புயர்டோ பிரின்சிசா ஆறு, தென் ஆப்பிரிக்காவின் டேபிள் மலை ஆகியவையும் அதிசய பட்டியலில் உள்ளன.

உலக அதிசயங்கள் குறித்த அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல் அடுத்த ஆண்டு (2012) தொடக்கத்தில் வெளியாகிறது.

Saturday, November 12, 2011

முந்தைய நாயகன் நாயகியின் பிள்ளைகளை ரகசியமாக படம் பிடித்த பெல் டைரக்டர்

ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் வேறு ஒரு நாயகனின் மகளுடன் நடிப்பதாக செய்திகள் வந்தது நாளிதழில், இதென்ன புது செய்தி.

அலைகள் ஓய்வதில்லை நாயகனின் மகனையும், நாயகியின் மகளையும் ஒரு படத்தில் ஜோடி சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் பெல் டைரக்டர்.


பழகிய இடங்களில் படம் பிடித்தால் தெரிந்துவிடும் என்று இரண்டு பேரையும் ஒரு ரகசியமான இடத்துக்கு அழைத்துப்போய் போட்டோ பிடித்தாராம் பெல்!


புதிய படத்தில் ஹீரோயின் உறுதி செய்யப்படாத நிலையில் பிற நடிகர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!