Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 30, 2012

மினி உலகக் கோப்பையை தூக்கி எறிந்த ஐ சி சி!!

துபாய்: மினி உலகக் கோப்பை என்றழைக்கப்பட்ட 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிட்யை 2013-ம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி முடிவு செய்துள்ளது.

2015-ம் ஆண்டு முதல் டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என ஒவ்வொரு போட்டிக்கும் ஒரே சாம்பியன்ஸ் டிராபிதான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன் டிராபியை கைவிட ஐசிசி முடிவு செய்துள்ளது.

2017-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை டெஸ்ட் போட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் போட்டி நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. அதனால் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையில் இருந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டி நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமைச் செயல் அதிகாரி ஹாரூண் லோர்கட் கூறுகையில், “கிரிக்கெட் அட்டவணையைப் பார்த்தீர்களானால் அதில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இருக்காது. எதிர்காலத்தில் அந்தப் போட்டியை நடத்துவதில்லை என்று கைவிட்டுவிட்டதே அதற்குக் காரணம். டெஸ்ட் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

2013-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அதுதான் கடைசி சாம்பியன்ஸ் டிராபி. இந்தப் போட்டி 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1998, 2000, 2002, 2004, 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.

Sunday, April 29, 2012

சூர்யா! கார்த்தி!! குழம்பிய இயக்குனர்?

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்ததால் கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா ஆகிய இருவரில் ஒருவர் தான் நடிப்பார் என பேசப்பட்டது.

ஆனால் கதைக்கு பொருத்தமாக இயக்குனர் யாரை தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வியை கேள்விக்குறி தாங்கிக் கொண்டிருந்தது. தனது மகளின் கோடை விடுமுறையை குளுமையாகக் கொண்டாட வெளிநாடு சென்றிருக்கும் வெங்கட் பிரபு, அடுத்த படத்தின் ஹீரோ கார்த்தி தான் என அறிவித்துவிட்டாராம்.

எனது கதையம்சத்தை வைத்து பார்த்தால் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி தான் பொருந்துவார். எதிர்காலத்தில் சூர்யாவுடன் ஒரு படம் பண்ணுவேன் என கூறியிருக்கிறார்.

இந்த படத்திற்கு ’பிரியாணி’ என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

Saturday, April 28, 2012

விசேஷ ஜீரண நீர் சுரக்கும் வெள்ளரி!!

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை.

ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும்,

பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்கு குளிர்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும். நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.

Friday, April 27, 2012

அமெரிக்காவால் அவமானப்பட்ட முதல் மாநில முதல்வர்!!

வாஷிங்டன்: எந்த ஒரு மாநில முதல்வரும் இந்த அளவுக்கு இதுவரை அவமானபட்டதில்லை அதுவும் இது நான்காவது முறை.

நரேந்திரமோடிக்கு விசா மறுத்ததில் மாற்றமில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க விசா வழங்குதுறையின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் புதனன்று வழமையான செய்தியாளர் சந்திப்பில் இச்செய்தியை உறுதிபடுத்தினார். "எங்கள் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை"என்றார் அவர்.

கடந்த இருவாரங்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ வால்ஷ் என்பவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரிக்கு எழுதிய கடிதத்தில் இது பற்றி வினவியிருந்தார். அவ்வினவுக்கு விடையிறுக்கும் விதமாகவே நூலண்ட் இவ்வாறு கூறினார். "இவ்விதயத்தில் பொதுவான விதிமுறைகளின்படியே செயல்படுகிறோம்" ஒரு இனப்படுகொளை நடக்க காரணமானவராக இருக்கிறார் மோடி என்றார் அவர்.

இந்த அறிவிப்பிற்கு முன்னதாக, இந்திய அமெரிக்க முஸ்லிம் சங்கம் என்னும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைப்பு, மோடிக்கு விசா வழங்குவதில்லை என்று 2005ல் அமெரிக்கா எடுத்த முடிவை மாற்றக் கூடாது என்று கோரியிருந்தது.

தனது ஆட்சியில் ஒரு சமூகத்தையே கொன்று குவித்தான் (தமிழின இனப்படுகொலை) ராஜபக்சே, இதேபோல்தான் இந்த வந்தேறி மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் செய்தார்கள்., இந்த கொடிய செயல்களை முன்னின்று நடத்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்த நரேந்திர மோடியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவனை தூக்கிலிட வேண்டும். மனிதாபிமானம் இன்னும் மீதமிருக்கிறது என்பதை நிரூபிக்க இது ஒன்றுதான் தற்போதைய தீர்வாகும்.

ஆனால் இந்தியாவில் இன்னும் இவன் ஒரு மாநில முதல்வர். இந்தியாவை ஆளும் காங்கிரசோ, இந்தியாவோ நடு நிலைமையானவைகள் அல்ல என்று இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம்.

Thursday, April 26, 2012

சச்சினுக்கு மத்திய அரசு கொடுத்த பிறந்த நாள் பரிசு!!

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்றுடன் 39 வயதை கடந்துள்ள சச்சினுக்கு இந்த பிறந்த நாள் நிச்சயம் மறக்க முடியாததாகவே இருக்கும்.

சர்வதேச போட்டிகளில் நூறு சதங்களை கடந்துள்ள சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பிய காங்., தலைவர் சோனியாவை இன்று காலை அவரது வீட்டில் தனது மனைவி அஞ்சலியுடன் சந்தித்தார் சச்சின். அது முதலே பற்றிக்கொண்டது பரபரப்பு. சச்சின் ராஜ்யசபா எம்.பி.,யாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதையடுத்தே இந்த சந்திப்பு நிகழ்வதாக மீடியாக்கள் கொளுத்திப்போட்டன.

தொடர்ந்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சச்சின் அரசியல் பிரவேத்தை வரவேற்கத்துவங்கின. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சச்சின் ராஜ்ய சபா எம்.பி.,யாவதற்கு வரவேற்பு தெரிவித்தன. தொடர்ந்து சச்சின், பாலிவுட் நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு அகா ஆகியோரை ராஜ்யசபா எம்.பி.,யாக பரிந்துரை செய்து மத்திய அரசு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 80ன் கீழ் பரிந்துரை செய்யப்பட்ட இம்மூவரையும் ராஜ்யசபா எம்.பி.,யாக்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்றிரவு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சச்சின் உள்ளிட்ட மூவரும் விரைவில் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்பர் என தெரிகிறது.

Wednesday, April 25, 2012

தயாரிக்கும் படத்தில் ரீமாவுக்கு வாய்ப்பளித்த விஜய்!

1980களில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில், ஏஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டான படம் சட்டம் ஒரு இருட்டறை. விஜயகாந்திற்கு ஹீரோ அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்த படம் இது. இப்படம் இந்தியிலும் ரீ‌-மேக் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தமிழில் ரீ-மேக் செய்யவுள்ளனர். படத்தின் நாயகனாக பிரபுவின் மகன் விக்ரமும், நாயகியாக கோ கார்த்திகாவும் நடிக்கவுள்ளனர். ‌இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பியாவும் நடிக்கவுள்ளார். இப்படத்தை நடிகர் விஜய்யே தயாரிக்க இருக்கிறார். விஜய் தயாரிக்கும் முதல்படம் இது.

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அதாவது விக்ரம் பிரபுவுக்கு அக்காவாக நடிகை ரீமா சென் நடிக்கவுள்ளார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்கும் முதல்படம் இது. இப்படத்தில் நடிப்பது குறித்து ரீமா கூறியுள்ளதாவது, சட்டம் ஒரு இருட்டறையின் இந்தி பதிப்பான அந்தா கானூன் படத்தை பார்த்தேன். அதில் போலீஸ் அதிகாரியாக ஹேமமாலினி நடித்து இருந்தார். இதுபோன்ற சவாலான வேடங்களில் தான் பெரிதும் நடிக்க விரும்புதாகவும், விஜய்க்காகவும் ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Tuesday, April 24, 2012

நாணயத்திற்கு விடை கொடுக்கும் வகையில் கனடாவில் புது முயற்சி!!

ஒட்டவா: மாறிவரும் நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகும் வேளையில் நாணயங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் புதிய டிஜிட்டல் கரண்சியை (mintchip) உருவாக்கியுள்ளது கனடாவின் ராயல் கனேடியன் மிண்ட் நிறுவனம்.

கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட மிண்ட்சிப் (mint chip) குறித்த வீடியோவில் எப்படியெல்லாம் இந்த மிண்ட் சிப்பை உபயோகிக்கலாம் என்று விளக்கப்பட்டது. ‘மிண்ட் சிப்’ வடிவமைப்பு இன்னும் மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் கூறப்பட்டது. பணத்தை விட மிகவும் எளிதாக உபயோகிக்கும் விதமாகவும்; குழந்தைகள் கூட கஷ்டம் இல்லாமல் எளிதாக உபயோகிக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மிண்ட் சிப்பில் பணத்திற்கு சமமான பதிப்பினை மைக்ரோ எஸ்.டி. அல்லது யு.எஸ்.பி. (Micri SD or USB) போன்ற சிப்பில் ஏற்றி ஒரு சிப்பில் இருந்து மற்றொரு சிப்பிற்கும் பணத்தை இடமாற்றம் செய்து (ஏற்றிக்)கொள்ளலாம். இந்த சிப் எந்த ஒரு வங்கியோடும் தொடர்பில் இருக்காது. அதே போல் அதற்கான மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (Centralized Database)எதுவும் இருக்காது.

ராயல் கனேடியன் மிண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) மார்க் புரூல், சாஃப்ட்வேர் நிபுணர்களை இதற்கான ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்களை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் முதல் பரிசு பெறுவோருக்கு 10 அவுன்ஸ் தங்க வேஃபர்கள் (டாலர் 17,000ற்கு சமமானது) வழங்கப்படும் என்றார்.

இதற்கு முன் வந்த ‘பிட்காயின்’ போன்று இதுவும் காணாமல் போகும் என்ற கருத்தினை புரூல் மறுத்துள்ளார்.

Monday, April 23, 2012

விட்ட இடத்தை பிடிக்க வருவதாக கூறும் A R R

கடந்த ஆண்டு ஒரு தமிழ் படத்திற்குக் கூட இசையமைக்காமல் இருந்துவிட்ட ஏ.ஆர். ரஹ்மான், இந்த ஆண்டு தற்போது ஒரு சில தமிழ் படங்களில் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் தமிழில் கடந்த ஆண்டு பணியாற்றாமல் இருந்ததற்கு எந்த காரணமும் இல்லை. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு பணியாற்றி விடுவேன் என்கிறார் ரஹ்மான்.

தற்போது ரஜினிகாந்த்தின் கோச்சடையான், கடல் படங்களுக்கு இசையமைத்து வரும் ரஹ்மான், மேலும், மரியான், யோஹன் அத்தியாயம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கௌதம் வாசுதேவன் இயக்கும் சில தொலைக்காட்சி சீரியல்களுக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்., இனி சின்னத்திரையிலும் கலக்குவார்ன்னு சொல்லுங்க.

Sunday, April 22, 2012

நடிகையையும் இயக்குனரையும் புகழும் விஜய்!.

தன்னுடன் நடிக்கும் நடிகையையும், தன்னை இயக்கும் இயக்குனரையும் புகழ்கிறார் விஜய்.

முருகதாஸின் பணிகளைப் பார்க்கும் போது எனக்கு இயக்குநர் மணிரத்னம் நினைவுதான் வரும். அவரை எப்போதும் செல்லமாக குட்டி மணிரத்னம் என்று தான் அழைப்பேன் என்கிறார் விஜய்.

நான் நடித்துள்ள ஒரு சில பொழுதுபோக்குப் படங்களில் துப்பாக்கி சிறந்த படமாக இருக்கும். அனைத்து பெருமையும் முருகதாஸையேச் சேரும். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து எடுத்துள்ளார் என்று முருகதாஸை புகழ்ந்து தள்ளுகிறார் விஜய்.

இப்படத்தில் உங்களுடன் ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வால் பற்றி கேட்டதற்கு, தமிழே தெரியாததால் வசனங்களைப் புரிந்து கொள்ள மிகவும் கஷ்டப்படும் காஜல் அகர்வால், ஆனால் வசனம் பேசி நடிக்கும் போது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். மிகவும் ஹார்ட் ஒர்க் நடிகை என்றார் விஜய்.

Saturday, April 21, 2012

இந்திய இளைஞர்களை தாக்கும் புற்று என்கிற பயங்கரம்?

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 2010ம் ஆண்டு புற்றுநோய் பாதித்து 5,56,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,95,000 பேர் 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள்தான். இவர்களில் 2,00,000 பேர் ஆண்கள், 1,95,000 பேர் பெண்கள் ஆவர்.

ஆண்களில் புற்றுநோய் தாக்கி உயிரிழந்தவர்களில் 23 சதவீதத்தினர் வாய்ப் புற்றுநோய் ஏற்பட்டும், 12 சதவீதத்தினர் வயிற்றுப் புற்றுநோயாலும், 11 விழுக்காட்டினர் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

பெண்களில், கழுத்துத் தொடர்பான புற்றுநோய் தாக்கி 17 சதவீதத்தினரும், மார்பகப் புற்றுநோய் தாக்கி 10 சதவீதத்தினரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 42 சதவீத ஆண்களும், 18 சதவீத பெண்களும் புகைப்பிடிப்பது மற்றும் புகையிலைப் பயன்படுத்தியதால் வரும் புற்றுநோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதுடையவர்கள்.

இதன் மூலம், இந்தியா புகையிலைக்கு எதிராக அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையிலும், புகையிலைப் பொருட்கள் மீது அதிகமான வரிகளை விதிக்க வேண்டிய நிலையிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Friday, April 20, 2012

சேது சமுத்திர திட்டத்துக்கு எதி(ரி)ரானவர்கள் இவர்கள்!?


புதுடெல்லி: சேது சமுத்திரம் தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவுச் செய்யலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் அனில் ஆர் தாவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு அரசு நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

“சேது சமுத்திரத்தை தேசிய சின்னம் ஆக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலை என்ன?” என்று ஹரேன் ராவலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்பது போன்ற விவாதத்தில் மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது. இப்போதும் அதே நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. அதனால், சேது சமுத்திரம் குறித்து புதிதாக கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்” என்று பதில் அளித்தார்.

அவரது பதிலையே ‘மத்திய அரசின் கருத்து’ என நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சேது சமுத்திரம் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு முதல் தடையிட்டது ஜெயாலலிதா, சுப்ரமணியம் சுவாமி, ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மற்றும் பார்ப்பனர்கள், பார்ப்பன நாளேடுகள் மட்டுமே இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர் என்பது குறுப்பிடத்தக்கது., நினைவு சின்னமாக்க துடிக்கும் இவர்கள் இத்திட்டத்தை தொடங்க ஏன் தடைபோடுகிறார்கள்!?

Thursday, April 19, 2012

கருவறையில் காரியம் (செக்ஸ்) நடத்திய சாமியார் மீண்டும்!

காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் பல பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார். இதை தன் செல்போன் மூலம் படம் பிடித்து ரகசியமாக பார்த்து ரசித்து வந்தார்.

இந்த ஆபாச படம் பலரது செல்போனுக்கு பரவியது. இதயடுத்து சிவகாஞ்சி போலீசார் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதனை செல்போனில் படம் பிடித்து அதை காட்டி மிரட்டி அடிக்கடி கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என காஞ்சீபுரம் கோர்ட்டில் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அர்ச்சகர் தேவநாதன் கடந்த 2010-ம் ஆண்டு ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். அவரை எந்த கோவிலிலும் அர்ச்சனை செய்யக்கூடாது என கூறப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் கோர்ட்டில் இருந்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்த கோர்ட்டில் கடந்த 10 மாதங்களாக நீதிபதி இல்லாததால் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தேங்கி கிடந்தன.

இந்த நிலையில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்த ஆனந்தி, பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட மகளிர் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 28-ந் தேதி பொறுப்பேற்றார். இதனால் தேங்கி கிடந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.

செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

Wednesday, April 18, 2012

மத்தியில் ஆளும் கட்சி எம் எல் ஏ வை மிரட்டும் பயங்கரவாத எம் பி!!

ராஜ்கோட்: பா.ஜ.கவின் ஜனாகத் தொகுதி எம்.பியான தினுசோலங்கி தன்னை தொந்தரவுச் செய்தும், மிரட்டியும் வருவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான தீர்சிங் பராத் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது: பா.ஜ.கவின் ஜனாகத் தொகுதி எம்.பியான பயங்கரவாதி தினுசோலங்கியின் உத்தரவு படி கோடிநர் போலீஸ் தனது குடும்பத்தினரை தொந்தரவு செய்துவருகிறது.

ஜனாகத் மாவட்டத்தில் சோலங்கியின் சட்டவிரோத சுரங்கத்தொழில் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்களை நான் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தேன். இதன் பெயரால் சோலங்கி தனது அதிகாரத்தை பிரயோகித்து தொந்தரவு செய்து வருகிறார். அவரது மிரட்டலை கவனத்தில் கொண்டு எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு தீர்சிங் ஆளுநர் கமலாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Tuesday, April 17, 2012

விஜய் ரசிகர்களை உதவிக்கு அழைக்கிறாரா எஸ் ஏ சி!?

விஜய் ரசிகர்களை உசுப்பிவிட்டு எஸ் ஏ சி, தன் தேவைக்கு உபோகித்துக்கொள்வதாக கோலிவுட்டில் பரப்பாக பேசப்படும் செய்தி.

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிராக நின்று தோல்வியை தழுவிய கேயார் தான் தற்போது பெப்ஸி பிரச்னையில் அ.செ. இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டியை .ரவாக்கி தயாரிப்பாளர்களை தனக்கு எதிராக உசுப்பு விட்டு வருகிறார் என உறுதியாக நம்புகிறாராம்

இயக்குநர் எஸ்.ஏ.சி! கேயாருக்கு எதிராக தன்மகன் விஜய் ரசிகர்களை உசுப்பி விடும் உத்தேசமும் இருக்கிறதாம் எஸ்.ஏ.சி., வசம்! நெசந்தானா.

இதையடுத்து, மேலும் இரு கோஷ்டியினருக்கும் மோதல் போக்கு தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில் இப்ராகிம் ராவுத்தர் கோஷ்டிக்கு போட்டியாக சிறப்பு கூட்டம் என்ற பெயரில் பொதுக்குழுவினை எஸ்.ஏ. சந்திரசேகரன் அணியினர் நாளை மறுநாள் (19-ந்தேதி) சென்னையில் கூட்டுகின்றனர். இதில் பங்கேற்கும்படி அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் அதிருப்தியாளர்களுக்கு எதிராக அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

விளம்பரத்துக்கே இத்தனை கோடிகள் என்றால் படத்துக்கு எத்தனை கோடிகள்

கல்யாண் ஜூவல்லர்ஸின் விளம்பரதாரராக நீண்டகாலமாக சுஷ்மிதாசென் இருந்து வருகிறார். இந்நிலையில் கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய விளம்பரதாரராக நடிகை ஐஸ்வர்யாராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரது விளம்பர ஒப்பந்தம் விரைவில் முடிகிறது. இதனையடுத்து புதிய விளம்பரதாரராக ஜஸ்வர் யாராயை ரூ.20 கோடிக்கு கல்யாண் ஜூவல்லர்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பிரசவத்திற்கு பிறகு தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கப்போகிறார்.

இந்நிலையில் தான் ஐஸூக்கு கல்யாண் ஜூவல்லர்ஸ் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 2 ஆண்டு ஒப்பந்தத்ததிற்கு ரூ.20 கோடி. அதாவது வருடத்திற்கு ரூ.10 கோடி சம்பளமாகும்.

Monday, April 16, 2012

ஒன்று வந்தால் இன்னும் ஒன்று தேடி வரும் ஆய்வில்!!

லண்டன்: ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுசம்மந்தமாக அவர்கள் நடத்திய ஆய்வில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முன்பு பலருக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே சர்க்கரை நோயின் அறிகுறியாகத்தான் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது இதயத்தில் உள்ள பாதிப்பாகவும் இருக்கலாம். சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதுவும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எனவே ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடனடியாக இதயம், சிறுநீரகம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்றும் பரிசோதித்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளர்.

Sunday, April 15, 2012

வரவேற்கத்தக்க சினி கலைஞர்களின் உதவும் மனப்பான்மை!

சென்னை கிண்டியில் உள்ள லீ-மெரிடியன் ஓட்டலில் வருகிற 15-ம்தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

பேஷன் ஷோவில் நடிகர்கள் சிம்பு, ஆர்யா, ஜீவா, மகத், சித்தார்த், நடிகைகள் டாப்சி, சோனியா அகர்வால், நர்கீஸ் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் பாடல் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கான மேடை 3டி அமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது. சினிமா தயாரிப்பாளர் துரை தயாநிதி மனைவி அனுஷா, நெபர்தரி என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் தொகையில் மனநலம் பாதித்த குழந்தைகளுக்கும், உதவும் தொண்டு நிறுவனமான அரவிந்த் பவுண்டேஷனுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, April 14, 2012

ஐ ஃபோ(ன்)ட் வாங்க தனது அங்கங்களை விற்ற இளைஞன்!?

பீஜிங்: ஐஃபாடும், ஐஃபோனும் வாங்குவதற்கு சீனாவில் 17 வயது இளைஞன் ஒருவன் தனது சிறுநீரகத்தையே விற்றுள்ளான். இச்சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் டாக்டர் உள்பட ஐந்து பேர் கைதானார்கள். சின்குவா செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

வாங் என்ற 17 வயது இளைஞனுக்கு ஐஃபோன், ஐபாட் மீது அதீத மோகம். ஆனால், அவற்றை வாங்க அவனிடம் பணம் இல்லை. இந்நிலையில் ஆன்லைன் சாட்டிங் மூலமாக இவனது ஆசையை அறிந்துகொண்ட சிறுநீரக வர்த்தக மாஃபியா கும்பல் சிறுநீரகத்தை விற்றால் 35 ஆயிரம் டாலர் தருவதாக ஆசையை தூண்டியது.

ஐஃபோன், ஐபாட் மோகத்தால் இறைவன் தனக்கு அளித்த சிறுநீரகத்தையும் விற்க தயாரானான் வாங்.

பின்னர் அக்கும்பல் இவ்விளைஞனை கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து அறுவைசிகிட்சை மூலம் சிறுநீரகத்தை எடுத்துக்கொண்டது. ஆனால், அவ்விளைஞனுக்கு 3 ஆயிரம் டாலர் மட்டுமே அளித்து ஏமாற்றிவிட்டது.

அறுவை சிகிட்சைக்கு பிறகு இளைஞன் நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிட்சை 15 லட்சம் நபர்களுக்கு தேவையாகும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் அறுவை சிகிட்சைகள் மட்டுமே நடப்பதாக சின்குவா கூறுகிறது. இதனால் சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளது என்று செய்தி நிறுவனம் கூறுகிறது.

அண்மையில் சீன பள்ளிக்கூடங்களில் புத்தகங்களுக்கு பதிலாக ஐபாட் உபயோகிக்க அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் ஒரு முழு பொழுதை கழிக்கப்போவது யார்?

நடிகர் விஜய்யின் ரசிகர்களால் எழுதி இசையமைக்கப்பட்ட ”இளையதளபதி விஜய்” ஆல்பத்தை நடிகர் விஜய் வெளியிட்டார். ஆல்பத்தை வெளியிட்டு பேசிய விஜய் “ துப்பாக்கி படம் நன்றாக வந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய விஜய் “நடந்து கொண்டிருக்கும் 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுடன் ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சியாக கொண்டாடப்போகிறேன்” என்று அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் நன்றாக படிக்கும் மாணவர்கள் இதை நினைத்துக் கொண்டே தேர்வில் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்களோ என்ற அச்சம் பெற்றவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.நடிகர் விஜய் இந்த அறிவிப்பை தேர்வு முடிந்ததும் அறிவித்திருக்கலாம் என்பது மக்களின் கருத்து.

Friday, April 13, 2012

இவருக்கு முதலிடம் தாராளமா தரலாமா! ஏன்??

பிரபல Time சஞ்சிகையின் உலகின் 100 செல்வாக்கான நபர்கள் 2012 பட்டியலுக்கான மக்கள் தெரிவு வாக்கெடுப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன.

இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்த இந்திய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இறுதிநேர எதிர்வாக்குகளால் மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளார்.வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தமக்கு ஆதரவாக வாக்கு சேர்க்குமாறு குஜராத் மக்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்து மோசடி செய்ததாக மோடி மீது காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது. தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக காங்கிரஸ் மீது மோடியும் பதிலுக்கு குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்றுடன் முடிவடைந்த வாக்கெடுப்பின் படி மோடிக்கு அப்பட்டியலில் 256,792 வாக்குகள் ஆதரவாகவும், 266,684 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளன. இதையடுத்து அப்பட்டியலில் அதிகூடிய எதிர்வாக்குகள் பெற்றவராக நரேந்திர மோடி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதலிடத்தை Anonymous எனும் இணையத்தள ஹேக்கர்ஸ் குழுவினர் பிடித்துள்ளதுடன், இரண்டாம் இடத்தை Reddit இணையத்தள நிர்வாக இயக்குனரான Erik Martin பிடித்துள்ளார்.எனினும் இப்பட்டியலின் இறுதி முடிவை தீவிர பரிசீலனைக்கு பின்னர் டைம் சஞ்சிகையின் எழுத்தாளர் குழு ஏப்ரல் 17ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.,

(குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் அகமதாபாத், சூரத், ராஜ்கோட்டிலிருந்து 16 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். மோடி பங்கேற்கும் விழாவிற்கு எப்படி கூட்டத்தை கூட்டுகிறார்கள். பாஜவுக்காக எப்படி நிதி வசூலிக்கிறார்கள் என்பதை பார்த்துத்தான் போலீசாருக்கு பதவி உயர்வு வழங்குகிறார்கள்), இனப்படுகொலையாளன் என்று முதலிடம் கொடுக்கலாம் இந்த மோ(கே)டிக்கு., உலக தீவிரவாதியில் இவனுக்கு முதலிடம் தரலாம்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்க சட்டத்துறை தீர்மானித்துள்ளதுபோல், நர மாமிச மோடியையும் விசாரிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்யும் உதவியாகயிருக்கும்.

Thursday, April 12, 2012

கர்ப்பம் தரிக்க இதை செய்து பார்க்கலாமே!!

லண்டன்: லண்டன் போஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குளிர் மற்றும் சூடான பானங்களை குடிப்பதால், மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர்.

அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

சர்க்கரை குறைந்த அல்லது உணவு கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் பானங்களை தினமும் 2 கப் சாப்பிட்டால், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைந்து விடும். அதே சமயம் சில பானங்கள் கர்ப்பம் தரிப்பதை தடை செய்கின்றன.

மற்ற காரணிகளுடன் கர்ப்பம் தரிக்க, டீ சதவிகிதம் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடல் நலத்துக்கு டீ பல வகையில் பலனளிக்கிறது. தினமும் 2 கப் சூடாக டீ குடித்தால் பெண்களுக்கு குழந்தை பேறு வாய்ப்பை அதிகரிக்கிறது.

அந்த வகை பானங்களை பெண்கள் தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு 20 சதவிகிதம் குறையும். அதே சமயம், காபி குடிப்பதால், எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

குழந்தை வேண்டும் என்று விரும்பும் பெண்கள் ரசாயன பொருள்கள் கலந்த மற்ற பானங்களை (பெப்சி, கோலா) ஒதுக்கி தள்ளி விட்டு, டீயோ, காபியோ குடிப்பது நல்லது., இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tuesday, April 10, 2012

மீண்டும் காட்ட துவங்கும் நயன்!

கவர்ச்சி நடிகை வித்யா பாலன் நடித்த “தி டர்ட்டி பிக்சர்ஸ்” படத்தின் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் டர்ட்டி பிக்சர்ஸ். சில்க் கதபாத்திரத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தமிழிலும், தெலுங்கிலும் நடிக்க வித்யாபாலனிடம் கேட்ட போது அவர் மறுத்துவிட்டதாகவும் பேசப்படுகிறது. நயன்தாரா ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் சீதையாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் ரசிகர்கள் அவரை சீதையாகவே பார்த்ததால் இனி கவர்ச்சி வேடத்தில் நடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்கள். இந்நிலையில் நயன்தாராவிற்கு கவர்ச்சி வேடத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா நடித்தால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவர்ச்சி விருந்தாக இருக்கும்.

நயன்தாராவிற்கு கன்னடம், மளையாலம் ஆகிய மொழிகளிலும் மார்கெட் இருப்பதால் அந்த மொழிகளிலும் படம் ரீமேக் செய்யப்படலாம் என்பது கோடம்பாக்கத்தின் கிசுகிசுப்பு - பணமும், புகழுக்காக கட்சை கட்டுவார் என்கிறது கோடம்பாக்கம்.

Monday, April 9, 2012

தொப்பைக்கான காரணம் கண்டுபிடிப்பு!!

வாஷிங்டன்:சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தொப்பை ஏற்படுவதற்குக் காரணமான மரபணுக்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

அமெரிக்காவின் பிலெடெல்பியா நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் ஸ்ட்ரூவான் கிராண்ட் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளனர். இந்த முடிவுகள் ""நேச்சர் ஜெனடிக்ஸ்'' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, வட அமெரிக்கக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு இதற்கு முன்னதாக 14 முறை மேற்கொள்ளப்பட்டது. சிறு குழந்தையிலேயே தொப்பை இருந்த 5,530 சிறார்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டனர்.

தொப்பைக்குக் காரணமான 2 மரபணுக்களைக் கண்டுபிடித்ததுடன் 2 மரபணு மாறிலிகளையும் அடையாளம் கண்டுள்ளனர்.

தொப்பையைக் குறைப்பதற்கான மரபணு சிகிச்சை முறைகளுக்கு இந்த ஆய்வுகள் வெகுவாகப் பயன்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது., இனி சில ஆய்வுகளை மேற்கொண்டு தொப்பை வராமல் இருக்க சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரிகிறது.

உலகில் உயரத்தை தொட்ட ஆப்பிள் சாப்ட்வேரின் புது சிகரம்!!

உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் வரைக்கும் 633.38 டாலர் விலைக்கு விற்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குகள் விலை, இந்தவாரம் கிடுகிடுவென உயர்ந்து 1000 டாலராக எட்டியுள்ளது.

இதனால் அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயர்ந்து இருக்கிறது. இதன்மூலம் உலகில், 1 டிரில்லியன் டாலரை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெயரை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.

Saturday, April 7, 2012

அஸ்க லஸ்க விஜய் தனுஷ்...?

கௌதம் மேனன் நடிகர் விஜய்யை வைத்து யோஹான் அத்தியாயம் ஒன்று என்ற படத்திற்கு போட்டோ ஷூட் எல்லாம் எடுத்துவிட்டார். ஆனால் மேற்கொண்டு அதை பற்றிய எவ்வித தகவலும் வெளியிடாமல் இருப்பதால் அந்த படம் மறுபடியும் துவங்கப்படுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் மெகா வசூல் சாதனை படைத்ததாகக் கூறப்படும் 3 படத்தில் நடித்த நடிகர் தனுஷை வைத்து கௌதம் மேனன் படம் இயக்கவிருப்பதாக தெரிகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் யாரிடமிருந்தும் வெளிவரவில்லை.

விஜய் நடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துவிட்டது. தனுஷ் இந்தியில் நடிக்கும் ரஞ்சனா படத்தின் படப்பிடிப்பு இனி தான் ஆரம்பிக்கப் போகிறது.

கௌதம் மேனன் படத்தில் நடிக்காமல் முருகதாஸ் படத்தில் நடிக்கச் சென்ற நடிகர் விஜய்யின் படம் ஆரம்பிக்கப்படுமா? இல்லை ’3’ படத்தில் கௌதம் மேனன் படத்திற்கு பொருத்தமாக நடித்த தனுஷ் படம் ஆரம்பிக்கப்படுமா? என்பது ரசிகர்கள் மனதில் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

மன்னார்குடி கும்பலுக்கு தாரை வார்க்கப்பட்ட தமிழகம்?

சிக்னல் கிடைத்ததும் போயஸ் கார்டனுக்கு செல்வதற்கு முன்பு, ராம நவமி நாளான ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள அகஸ்தியர் திருக்கோயிலில் சசிகலா சென்று வழிபட்டார்.

கார்டனுக்கு சென்ற பின்னர் மீண்டும் அதே கோயிலுக்கு பங்குனி உத்திர நாளான ஏப்ரல் 5ஆம் தேதி சென்ற சசிகலா விசேஷ பூஜை செய்தார்.

அடுத்த நாளான புனித வெள்ளி (ஏப்.6) அன்று, முதல்வர் ஜெயலலிதாவுடன் கோட்டூர்புரம் செல்வ விநாயகர் கோவிலுக்கு அதிகாலை சசிகலா சென்று ரகசிய பூஜை ஒன்றை நடத்தியதாகவும், இருவரும் அங்கு சுமார் 30 நிமிடம் பிரார்த்தனை செய்ததாகவும் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

அதிமுக தலைவர்கள் வட்டாரத்திலும் இந்த செய்தி பகிர்ந்து கொள்ளப்படுகிறது. டிசம்பர் 19ஆம் தேதி கார்டனில் இருந்து வெளியேறிய சசிகலா, ஏப்ரல் 2ஆம் தேதி அங்கு திரும்பினார். அதன் பிறகு ஜெ., சசிகலா இணைந்து முதல் முறையாக கோவிலுக்கு சென்றுள்ளனர் என்ற செய்தி பரவியதால், ஜெ. செல்லும் வெளியூர் பயணங்கள், ஆலய தரிசனங்களில் சசிகலா ஆப்செண்ட் ஆக மாட்டார் என்று உறுதியாகி உள்ளது என ர.ர..க்கள் கதிகலங்கி உள்ளனர்.

கூடுதல் செய்தி: எருதை பலி கொடுத்தால் (ஜெயா சசி மண வாழ்க்கை, அரசியல்) எல்லாம் நன்றாக நடக்கும் என்று மூத்த ஜோசியர் சொன்னதால் கோயிலில் விஷேச பூஜைக்கு சசி ஏற்பாடு செய்து இருவரும் கோயிலுக்கு சென்றதாக (அதன்படி அய்யரைக்கொண்டு பலி கொடுக்கப்பட்டது) போயஸ் விசுவாசி சொல்லி சென்றது., இனி தமிழகத்தை ஆளப்போவது மன்னார்குடி கும்பல் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

Friday, April 6, 2012

விஜய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முருகதாஸ்!

தமிழ் திரையுலகில் தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை தந்த விஜயின் அடுத்த படம் துப்பாக்கி. ஆக்சன் படமாக வளர்ந்து வரும் இந்தப் படத்தை வெற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில் துப்பாக்கி படத்துக்கு மொத்தம் 5 பாடல்கள் என்றும் படத்தின் தீம் மியூசிக் ஒரிரு வாரங்களில் தயாராகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் கேட்டுக்கொண்டதன்படி சிறிய வேடத்தில் நடித்துத்துள்ளேன். மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 12ம் தேதி தொடங்குகிறது என்றார்., வருமுன்னே இத்தனை பிரபலம் இப்படம்.

Thursday, April 5, 2012

அதிசய வைக்கப்போகும் ஐ போன் ஐந்து

ஐ-போன்கள் வரலாற்றில் மகத்தான இடத்தைப் பிடித்துள்ள ஆப்பிள் நிறுவனம் வரும் ஜூனில் ஐந்தாம் தலைமுறை ஐ-போனை (Iphone 5) அறிமுகப்படுத்த இருக்கிறது.

அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் வரும் ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை நடைபெற இருக்கும் உலகளாவிய வன்பொருள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாட்டில் (WWDC) இந்த ஐந்தாம் தலைமுறை ஐ-போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

ஜூன் மாதத்திற்குள் ஐந்தாம் தலைமுறை ஐ-போனை வெளியிடும் வகையில் சுமார் 18,000 பணியாளர்களை நியமிக்க இருப்பதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐ-போன் 4.6 இன்ச் அளவு கொண்டதாகவும், துல்லியமான படங்களுக்காக, ரெட்டினா திரையைக் கொண்டதாகவும் இது இருக்கும் என தெரிகிறது.

இதன் விலையும், இன்ன பிற சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Wednesday, April 4, 2012

உணவில் விஷ (நச்சு) தன்மையை மறைக்கும் விஷமிகள்!

புதுடெல்லி: கேஎஃப்சி உள்ளிட்ட சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உணவுப்பொருட்களில் விஷத் தன்மையை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

மக்களை தவறாக புரியவைக்கும் விளம்பரங்களை இவர்கள் அளிப்பதாக டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பான செண்டர் ஃபார் ஸயன்ஸ் அண்ட் என்விரான்மெண்ட்(சி.எஸ்.இ) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தகைய பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களில் உடல் பருமன், நீரழிவு(சர்க்கரை வியாதி) நோய்களுக்கு(obesity and diabetes) காரணமான ட்ரான்ஸ் ஃபேட், இனிப்பு மற்றும் உப்பின்(rans-fats, salts and sugar) அளவு அதிகமாக உள்ளது என்று சி.எஸ்.இ தனது அறிக்கையில் கூறுகிறது.

16 பிரபல உணவு நிறுவனங்களின் தயாரிப்புகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இது தெரியவந்துள்ளது. மேகி, டாப் ரேமன் நூட்ல்ஸ், மெக்டொனால்ட், கேஎஃப்ஸி -கெண்டகி ப்ரைட் சிக்கன், ஹல்திராம் ஆலு பூஜிய ஆகிய ப்ராண்ட் உணவுகளில் ட்ரான்ஸ் ஃபேட்டின் அளவு கூடியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரெடிமேட் ஃபுட்களில்(ஆயத்த தயாரிப்பு உணவுகளில்) சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்களின் அளவு குறித்து உலக சுகாதார மையம்(who) பரிந்துரைத்துள்ளது. ஆனால், பரிசோதனைக்கு உட்படுத்திய இத்தகைய உணவுப்பொருட்களில் இந்த நிபந்தனைகள் எல்லாம் மீறப்பட்டுள்ளன என்று சி.எஸ்.இயின் ஆய்வறிக்கை கூறுகிறது.

ட்ரான்ஸ் ஃபேட் இதய தமனிகளில்(arteries) அடைந்து இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகும். இளைஞர்களை வெகு விரைவில் நோய்களுக்கு அடிமைகளாக்க இத்தகைய உணவு வகைகளால் இயலும்.

அண்மைக் காலமாக இளைஞர்களுக்கு நீரழிவு நோயும்(diabetes) மற்றும் கொலஸ்ட்ரோல்(கொழுப்பு) அதிகமாக காரணம் ஜங்க் ஃபுட்களின்(ஃபாஸ்ட் புட்) பழக்கம் அதிகமானதுதான்.

அதேவேளையில் இக்குற்றச்சாட்டுக்களை மேற்கூறிய நிறுவனங்கள் மறுத்துள்ளன. பெப்ஸிகோ, நெஸ்லே, மெக்டொனால்ட் ஆகிய நிறுவனங்கள் சி.எஸ்.இயின் அறிக்கைக்கு விளக்கம் அளித்துள்ளன.

Tuesday, April 3, 2012

சூர்யா ஸ்ருதி! 7 அறிவில் பிரபலம் அடைந்த ஜோடி இன்று 8 வதாக!?

விஜய் டிவியில் நடிகர் சூர்யா தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்ச்சியில் சூர்யா கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடையளிப்பதன் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர் ஒரு கோடியை வெல்வார்.

இந்நிகழ்ச்சியில் நாளை(03.04.12) நடிகை ஸ்ருதிஹாஸன் கலந்து கொள்ள இருக்கிறார். இதை பற்றி தனது ட்விட்டர் சமூக இணையதளத்தில் ட்வீட் செய்த்திருக்கும் ஸ்ருதிஹாஸன் “இன்று 8 மணிக்கு சூர்யாவின் NVOK நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறேன். எனக்கு பிடித்த நடிகரான சூர்யாவின் அறிவுப்பூர்வமான(!) கேள்விகளுக்கு அரட்டையடித்துக் கொண்டு பதிலளிக்கப் போகிறேன்.

மறக்காமல் பாருங்கள்” என்று கூறியுள்ளார். சூர்யாவும் ஸ்ருதிஹாஸனும் இதற்கு முன்னர் ஏழாம் அறிவு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளவாறு சூர்யா கேட்கப்போகும் அறிவுப்பூர்வமான கஷ்டமான(!) கேள்விகளுக்கு ஸ்ருதி எவ்வாறு பதிலளிக்கப் போகிறார்? என்பது தான் வியப்பாக உள்ளது. பொருத்திருந்து பார்ப்போம்.

Monday, April 2, 2012

தீவிரவாதி பயன்படித்திய பொருட்கள் லண்டனில் ஏலம்!!

லண்டன்: மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி மற்றும் ராட்டை உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது.

டில்லியில், 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி காந்தியடிகள், ஆர் எஸ் எஸ் தீவிரவாதி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது குண்டு துளைத்ததால், அவர் உடலில் இருந்து சிதறிய ரத்தம் அங்குள்ள புல்களின் மீது படிந்தது. இதை அவருடன் இருந்த பி.பி.நம்பியார் சேகரித்து வைத்திருந்தார்.

காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் ஆகியவற்றை ஒரு பெட்டியில் புனிதமாக சேகரித்து வைத்திருந்தார் நம்பியார். இதேபோல காந்தி பயன்படுத்தி வந்த ராட்டை, மூக்கு கண்ணாடியையும் அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார்.

தற்போது இந்த பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், "முல்லக்' ஏல நிறுவனத்தால், வரும் 17ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. மகாத்மாவின் உடமைகளான இவை 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஹிந்துத்துவா, (ஆர் எஸ் எஸ்) தீவிரவாதத்தின் ஊற்றுகன் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம்., (காந்தியை கொன்ற தீவிரவாதி கோட்சேதான் என்று நிரூபணமானதும் ஆர் எஸ் எஸ் கோட்சேவை கழட்டிவிட்டது வேறுவிசயம்)

நண்பனில் பைசா (வசூல்) பார்த்ததால் மீண்டும் சங்கர்!!

நண்பன் படம் ரிலீஸான பிறகு எந்த ஒரு செய்தியும் இல்லாமல் அமைதியாய் இருந்த ஷங்கர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்தார்(ஒரு கால்த்தில்) ஷங்கர்.

முதல்வன், காதல், இம்சை அரசன் 23-ம் புலிகேசி என ஷங்கர் தயாரித்த படங்கள் வெற்றியடைந்ததால் தைரியமாக அடுத்தடுத்த படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்களில் பல படங்கள் தோல்வியடைந்ததால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு விடுமுறை அளித்துவிட்டார்.

கடைசியாக ஷங்கர் தயாரித்த படம் ஆனந்தபுரத்து வீடு என்ற படம். இப்பொழுது ஷங்கர் மறுபடியும் தயாரிப்பில் இறங்குகிறாராம். பல புதுமுக இயக்குனர்களுக்காக இறங்காத ஷங்கரின் மனது தற்போது தான் இறங்கியுள்ளது. அந்த இயக்குனரிடன்ம் கதை கேட்ட பின் நல்ல செய்தியாக சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பியுள்ளார். ஒருவேளை இது நண்பன் படம் பார்த்ததன் (நண்பன் வசூலில் பைசா பார்த்ததுதான்) விளைவாக இருக்குமோ?

Sunday, April 1, 2012

முதல் மாநிலமாக மாற்றுவோம் பிற்(பொறம்)போக்கு முதல்வர்!!

புது தில்லி: பல்வேறு விஷயங்களில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குஜராத் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:÷விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.

அரசின் பட்ஜெட்டில் 19 இனங்களில் ரூ.1,444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.2,045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அரசின் பட்ஜெட் தொடர்பான செயல்பாடு சரியில்லை என்பதையே காட்டுகிறது.

முறையான விளையாட்டுக் கொள்கை வகுக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் அனைவரும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல்பாட்டில் இல்லை.

குடிநீர்க் கொள்கையும் சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவில்லை.

நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை, தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை.

நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!