Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, February 11, 2013

வி(ஷ)ஸ்வரூபத்தை இப்படியும் தடுக்கலாம்?

இந்திய திரு நாட்டில் எந்த ஒரு செயலுக்கும் மத சாயம் பூசுவது வழக்கமாகிவிட்டது, ஊடகங்கள் முதற்கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் கூத்தாடிகளையும் தொடர்கிறது., தீவிரவாதம் செய்கிறவன் மட்டும்தான் தீவிரவாதியா அதை விதைப்பவனும் தீவிரவாதிதான்.

எனதருமை இஸ்லாமிய சகோதரனே......ஒரு நிமிடம்...!?

நீ தீவிரவாதியா? உன்னுடைய மார்க்கம் உனக்கு அதைத்தான் கற்றுக்கொடுக்கிறதா?

நீ இந்தியாவில் இருந்து கொண்டு பாக்கிஸ்தானுக்கு நன்றி விசுவாசமாக நடந்து கொள்கிறாயா? அதைத்தான் உன்னுடைய சமூகம் உனக்கு கற்றுகொடுத்ததா?

நீ வாழும் நடுத்தர குடும்பம் அற்பத்தொகைக்காக நமது நாட்டு ரகசியங்களை தீவிரவாதிகளிடம் காட்டிக்கொடுத்ததா?

ஜிஹாத் என்றப்பெயரில் அப்பாவி மக்களை வேட்டையாட சொல்லி உன்னுடைய இஸ்லாம் உன்னை படிப்பிக்கிறதா?

ஆமாம் என்றால் விஜயும், கமலும், முருகதாசும் இன்னும் பிற கூத்தாடிகளும் அப்படி சொல்வதில் எந்த தவறும் இல்லை. துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற படங்கள் வெள்ளிவிழா காண்பதற்கு உன்னுடைய முழுஒத்துழைப்பை தரலாம்.

இல்லையென்றால் இனி நீ செய்ய வேண்டியது.!?

கூத்தாடிகளுக்காக பரிந்து பேசுவதை முதலில் நிறுத்து. இனி இதுபோன்ற அயோக்கியர்களின் படத்தை ஒரு போதும் பார்க்கமாட்டேன் என்று நீ சபதம் எடுப்பதுடன் உன்னுடைய சக சகோதரனுக்கும் எடுத்து சொல்லி புரிய வை.

உலகிற்கே உதாரணமாக வாழ்ந்த உத்தம தலைவராம் உலக தூதர் நபிகள் நாயகத்தை(ஸல்) விட்டுவிட்டு பணத்திற்காக உடம்பைவிற்கும் விபச்சாரர்களை தலைவனாக்கி கொண்டதை நினைத்து மனமுருகி உங்களையும், உலகத்தையும் படைத்த அந்த ஒருவனிடம் மனமுறுகி மன்னிப்பு கேள்.

இது என் நாடு. நாங்களும் இந்நாட்டின் மைந்தர்களே... காந்தியை கொன்ற கோட்சே, அற்ப தொகைக்கு ஆங்கிலேயனிடம் ஒற்றுகொடுத்த எட்டப்பன் வர்க்கமல்ல நீங்கள்.(அவர்கள் வல்லரசுகளுக்கு வாலாட்டும் வந்தேறி கூட்டம் என்பதை மனதில் கொள்) இந்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயனிடம் வாளேந்தி, நெஞ்சை நிமிர்த்து யுத்தம் செய்த திப்புசுல்தான் வகையறாக்கள் நீங்கள் என்பதை மக்களுக்கு புரியவை.

அன்பையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் இஸ்லாம் போரில்கூட பெண்களையும், குழந்தைகளையும்,முதியவர்களையும், பலவீனமானவர்களையும், சரணடைந்தவர்களையும் விட்டுவிடுங்கள் என்று போதிக்கிறது. அப்படிப்பட்ட மார்க்கத்தை இழிவு படுத்தும் கயவர்களை எதிர்த்து போராட தயங்காதே.

வரலாறு தெரியுமா? இரண்டு சம்பவங்களுக்குப் பிறகே, இந்திய தேசம் மத மோதல்களால் தனது மண்ணில் ரத்தம் பூசிக் கொள்ளத் துவங்கியது. ஒன்று, பாபர் மசூதி இடிப்புச் சம்பவம். மற்றொன்று, அதற்கு முந்தையது... சுதந்திர போராட்ட காலத்தில், இந்து மகாசபா துவக்கப்பட்ட காலம். இந்தியா, இந்துக்களுக்கே என்ற வாதம் அழுத்தமாக முன்வைக்கப்பட்ட நேரத்தில், முதல் பிளவு உண்டானது. ஆனாலும், இஸ்லாமிய சகோதரர்கள் கைகோர்த்து, இணைந்து வாழவே விருப்பமாக இருந்திருக்கிறார்களே அன்றி, பிரிந்து செல்ல அல்ல. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறை படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்., நீயும் தெரிந்துகொள்.

நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பவர்களில் எல்லோரையும் விட சிறந்தவர்கள் நீங்கள் என்பதை உணர்த்திகாட்டு. நடுநிலையாளர்கள் உன்னை நிச்சயம் புரிந்துக்கொள்வார்கள்.

1 comments :

நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!